எழில் நிறை வளம் நிறை - என
இயம்பிடும் கவி நிறை
புவி நிறை பேரெலாம் - புகழ்
போற்றிடும் இயற் கலை
வனம் நிறை மலரிலும் - அம்
மலரிடைத் தேனிலும்
மனம் நிறை மணத்திலும் - நாம்
மகிழ்வுறும் இயல் வளம்
கனி தரும் சுவை தரும் - நம்
கண்குளிர் இதம் தரும்
புல் வெளிப் பூஞ்சோலை - அருவி
நீள் அரவமாய் நெளிந்தோடும்
ஆழி எங்கும் அலையாடும் - ஓடம்
அலையிடையே தள்ளாடும்
களனி எங்கும் கதிராடும் - காலை
கதிரவனின் துதிபாடும்
மலையோடு முகில் மோதும் - மதி
கெட்டபின்னே மழையாகும்
மானோட மயிலாடும் - மாலை
கருக்கலிலும் குயில் பாடும்
விந்தைகள் நிறைந்தது - நாம்
வியந்திடும் அழகிது
இயற்கையே என்பது - ஓர்
இறைவனின் படைப்பிது !
இயம்பிடும் கவி நிறை
புவி நிறை பேரெலாம் - புகழ்
போற்றிடும் இயற் கலை
வனம் நிறை மலரிலும் - அம்
மலரிடைத் தேனிலும்
மனம் நிறை மணத்திலும் - நாம்
மகிழ்வுறும் இயல் வளம்
கனி தரும் சுவை தரும் - நம்
கண்குளிர் இதம் தரும்
புல் வெளிப் பூஞ்சோலை - அருவி
நீள் அரவமாய் நெளிந்தோடும்
ஆழி எங்கும் அலையாடும் - ஓடம்
அலையிடையே தள்ளாடும்
களனி எங்கும் கதிராடும் - காலை
கதிரவனின் துதிபாடும்
மலையோடு முகில் மோதும் - மதி
கெட்டபின்னே மழையாகும்
மானோட மயிலாடும் - மாலை
கருக்கலிலும் குயில் பாடும்
விந்தைகள் நிறைந்தது - நாம்
வியந்திடும் அழகிது
இயற்கையே என்பது - ஓர்
இறைவனின் படைப்பிது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக