வாருங்கள் கொடி ஏற்றிடுவோம்
.....................................................
கொடி எது ?
இது கொடியது !
குர்ஆனும் சுன்னாவும்
கூறாத வழியிது
தூயோனுக்கிணைவைக்கும்
தெளிவான ”ஸிர்க்” இது
தூண்டும் சைத்தானின்
சூழ்ச்சியில் இது கொடியது
மறையது அருளாத
மா பாவச்செயலிது
மானிடரே விளங்கிடுவீர் - இறை
மறையெடுத்து ஓதிடுவீர்
அறபியிலே வந்ததெல்லாம்
அருள் குர்ஆன் ஆவதில்லை
இசைக்கும் தீன் கீதமெல்லாம்
இஸ்லாம் என்று ஆவதில்லை
மகான்களை நாம் மதித்திடுவோம்
மாறாக
மார்க்கத்தின் பெயராலே
மடத்தனங்கள் செய்கின்ற
கூட்டத்தில் நாம் சேர்ந்து
கொடும் நரகில் வீழனுமா ?
சொல்லுங்கள் கொடி எது ?
சொல்கிறேன் இது கொடியது !
தாடிகளும் சால்வைகளும்
நரகத்தை தடுப்பதில்லை
முஹையத்தீனும் நேர்ச்சைகளும்
சுவர்க்கத்தில் நுழைப்பதில்லை
ஆனாலும் மானிடரே
அல்-குர்ஆனும் நபிவழியும்
ஆகிரத்தில் வெற்றிபெறும்
.....................................................
கொடி எது ?
இது கொடியது !
குர்ஆனும் சுன்னாவும்
கூறாத வழியிது
தூயோனுக்கிணைவைக்கும்
தெளிவான ”ஸிர்க்” இது
தூண்டும் சைத்தானின்
சூழ்ச்சியில் இது கொடியது
மறையது அருளாத
மா பாவச்செயலிது
மானிடரே விளங்கிடுவீர் - இறை
மறையெடுத்து ஓதிடுவீர்
அறபியிலே வந்ததெல்லாம்
அருள் குர்ஆன் ஆவதில்லை
இசைக்கும் தீன் கீதமெல்லாம்
இஸ்லாம் என்று ஆவதில்லை
மகான்களை நாம் மதித்திடுவோம்
மாறாக
மார்க்கத்தின் பெயராலே
மடத்தனங்கள் செய்கின்ற
கூட்டத்தில் நாம் சேர்ந்து
கொடும் நரகில் வீழனுமா ?
சொல்லுங்கள் கொடி எது ?
சொல்கிறேன் இது கொடியது !
தாடிகளும் சால்வைகளும்
நரகத்தை தடுப்பதில்லை
முஹையத்தீனும் நேர்ச்சைகளும்
சுவர்க்கத்தில் நுழைப்பதில்லை
ஆனாலும் மானிடரே
அல்-குர்ஆனும் நபிவழியும்
ஆகிரத்தில் வெற்றிபெறும்
சத்தியமாய் சொல்லுகின்றேன்
சத்தியம்தான் ஜெயித்து நிற்கும்
அசத்தியம் ஓர் நாள் அழிந்துவிடும்
அந்நாளில் இதை உணர்வோம் - பெரும்
அவதிகொண்டு நாம் அலைவோம்
சத்தியம்தான் ஜெயித்து நிற்கும்
அசத்தியம் ஓர் நாள் அழிந்துவிடும்
அந்நாளில் இதை உணர்வோம் - பெரும்
அவதிகொண்டு நாம் அலைவோம்
ஆடுகளும் கோழிகளும்
அள்ளுகாணிக்கை மஞ்சள்சோறும்
அவுலியாக்களுக்கு நேர்ச்சை என்றால்
அலிபாவாக்கள் உண்பதென்ன ?
நோன்புவைத்தல் சிரம் பணிதல்
விருந்துவைத்து உபசரித்தல்
தான தர்மம் செய்திடல்
எல்லாமுமம் நேர்ச்சைதான் - அது
இறைவன் பெயரால் மட்டுமென்றால்
மடத்தனங்கள் செய்கின்றோம் ?
இஸ்லாமியத்தோழர்களே !
இன்னுமா விளங்கவில்லை
நேர்ச்சை என்பது எது என்று..
பரவாயில்லை !
”பக்கீர் ஜமாஅத்தார்” கொள்கையென்றால்
அவர்கள் பாடிடட்டும்
புகழ் ஓதிடட்டும் - பக்தி
பரவசத்தையேகிடட்டும்
ஒரு சில இரவுக்காய்
உலமாக்கள் என்கின்ற போர்வையிலே
உலவு நீங்கள் யார் ?
பாவாக்களா ? அலிபாவாக்களா ?
உங்களைத்தான் கேட்கின்றேன்...
இஸ்லாத்தின் ஆதாரம்
இறுதி நாள் வரைக்கும்
அல் குர்ஆனும் நபி வழியும் - என்று
உலகம் ஏற்றிருக்க
எவ்விடத்தில் இக் கொடி யது பற்றி
இயம்பி நிற்கு கூறிடுவீர் ?
அல் குர்ஆனும் நபி வழியும் - என்று
உலகம் ஏற்றிருக்க
எவ்விடத்தில் இக் கொடி யது பற்றி
இயம்பி நிற்கு கூறிடுவீர் ?
வாருங்கள் பேசிடுவோம் - யாரும்
வஞ்சிக்கத்தேவையில்லை
கொடி எது என்று தேடிநின்றேன் - இது
கொடியது என்று புரிந்ததுவே !
வாருங்கள் ஒன்றிணைவோம்
வையகத்தில் தீனின் கொடியை ஏற்றிடுவோம்!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக