எண்ணெய் இல்லாமலே
என்னை விளக்காய் ஏற்றினாய்
ஜன்னல் இல்லாமலே
காற்றாய் வந்து தீண்டினாய்
என்னைச் சொல்லாமலே
இதய வாசல் தாண்டினாய்
நீ தாண்டினாய்...தாண்டினாய்...
மனம் தூண்டினாய்...
-எண்ணெய்-
அலைகள் இல்லாமலே
நுரையாய் கரையில் சேர்க்கிறாய்
பூக்கள் இல்லாமலே
மாலை ஒன்றை கோர்க்கிறாய்
கண்ணைக் கேளாமலே
கனவில் வந்து தாக்கினாய்
எனை தாக்கினாய்...தாக்கினாய்...
-எண்ணெய்-
தூரிகை இல்லாமலே
என்னை ஓவியன் ஆக்கினாய்
காவியம் சொல்லாமலே
கவிஞன் என்று மாற்றினாய்
வாலிபம் செல்லாமலே
வாழ்க்கை வீணை மீட்டினாய்
விரல் மீட்டினாய்...மீட்டினாய்...
விழி தீண்டினாய்...
-எண்ணெய்-