பிழைதிருத்தம்
...........................
எனது பிரமாண்டத்தை
உனது மெல்லிய தலைமுடியின்
தடிப்பமளவாவது திருப்பிக்கொள்ள விளைகிறேன்
அது எத்தனை பெரிய அவஸ்தை
விபரீதங்களுக்கு அஞ்சிக்கொண்டு
எத்தனை நாட்களுக்கு இறந்து கொண்டிருப்பது
எந்த உண்மைகளையும் - இனி
நான் உன்னிடமும் சொல்வதாயில்லை
மௌனமாக இருந்துவிட்டுப்போகிறேன்
வேலிகளுமில்லாத ஓணாண்களுமில்லாத
சாட்சிகளற்ற அண்டத்தில்