செவ்வாய், 3 டிசம்பர், 2013
வெள்ளி, 29 நவம்பர், 2013
அழகுநிலாக்காயுது
அழகுநிலாக்காயுது
தனியாய் காயுது தங்க நிலா - நீ
தவழும் அழகோ மேக உலா
பார் முழுதும் உன் பாலொளியே - இது
பகலா இரவா புரியலியே
தாரகை குஞ்சுகள் கண் சிமிட்டும் - ஒரு
தலைவனைப் போலுடல் பவனிவரும்
கார்மேகம் உன்னை சூழ்கையிலே - என்
கவலையை நீதான் அறிவாயோ
வில்லுரு போன்றே தோன்றுகிறாய் - நீ
விரைவாய் நாளும் வளருகிறாய்
பருவம் பூரணமானதுமே - பாவம்
பழைய நிலைக்கே மாறுகிறாய்
பனித்துளி முழுவதும் மினுங்குகிறாய் - நீர்
பாத்திரத்தில் வந்து பதுங்குகிறாய்
ஆடியிலே உன்னை சிறைப்பிடிக்கும் - சிறு
ஆனந்தத்தில் நான் பாடுகிறேன்
தனியாய் காயுது தங்க நிலா - நீ
தவழும் அழகோ மேக உலா
பார் முழுதும் உன் பாலொளியே - இது
பகலா இரவா புரியலியே
தாரகை குஞ்சுகள் கண் சிமிட்டும் - ஒரு
தலைவனைப் போலுடல் பவனிவரும்
கார்மேகம் உன்னை சூழ்கையிலே - என்
கவலையை நீதான் அறிவாயோ
வில்லுரு போன்றே தோன்றுகிறாய் - நீ
விரைவாய் நாளும் வளருகிறாய்
பருவம் பூரணமானதுமே - பாவம்
பழைய நிலைக்கே மாறுகிறாய்
பனித்துளி முழுவதும் மினுங்குகிறாய் - நீர்
பாத்திரத்தில் வந்து பதுங்குகிறாய்
ஆடியிலே உன்னை சிறைப்பிடிக்கும் - சிறு
ஆனந்தத்தில் நான் பாடுகிறேன்
புதன், 27 நவம்பர், 2013
வாருங்கள் கொடி ஏற்றிடுவோம்
வாருங்கள் கொடி ஏற்றிடுவோம்
.....................................................
கொடி எது ?
இது கொடியது !
குர்ஆனும் சுன்னாவும்
கூறாத வழியிது
தூயோனுக்கிணைவைக்கும்
தெளிவான ”ஸிர்க்” இது
தூண்டும் சைத்தானின்
சூழ்ச்சியில் இது கொடியது
மறையது அருளாத
மா பாவச்செயலிது
மானிடரே விளங்கிடுவீர் - இறை
மறையெடுத்து ஓதிடுவீர்
அறபியிலே வந்ததெல்லாம்
அருள் குர்ஆன் ஆவதில்லை
இசைக்கும் தீன் கீதமெல்லாம்
இஸ்லாம் என்று ஆவதில்லை
மகான்களை நாம் மதித்திடுவோம்
மாறாக
மார்க்கத்தின் பெயராலே
மடத்தனங்கள் செய்கின்ற
கூட்டத்தில் நாம் சேர்ந்து
கொடும் நரகில் வீழனுமா ?
சொல்லுங்கள் கொடி எது ?
சொல்கிறேன் இது கொடியது !
தாடிகளும் சால்வைகளும்
நரகத்தை தடுப்பதில்லை
முஹையத்தீனும் நேர்ச்சைகளும்
சுவர்க்கத்தில் நுழைப்பதில்லை
ஆனாலும் மானிடரே
அல்-குர்ஆனும் நபிவழியும்
ஆகிரத்தில் வெற்றிபெறும்
.....................................................
கொடி எது ?
இது கொடியது !
குர்ஆனும் சுன்னாவும்
கூறாத வழியிது
தூயோனுக்கிணைவைக்கும்
தெளிவான ”ஸிர்க்” இது
தூண்டும் சைத்தானின்
சூழ்ச்சியில் இது கொடியது
மறையது அருளாத
மா பாவச்செயலிது
மானிடரே விளங்கிடுவீர் - இறை
மறையெடுத்து ஓதிடுவீர்
அறபியிலே வந்ததெல்லாம்
அருள் குர்ஆன் ஆவதில்லை
இசைக்கும் தீன் கீதமெல்லாம்
இஸ்லாம் என்று ஆவதில்லை
மகான்களை நாம் மதித்திடுவோம்
மாறாக
மார்க்கத்தின் பெயராலே
மடத்தனங்கள் செய்கின்ற
கூட்டத்தில் நாம் சேர்ந்து
கொடும் நரகில் வீழனுமா ?
சொல்லுங்கள் கொடி எது ?
சொல்கிறேன் இது கொடியது !
தாடிகளும் சால்வைகளும்
நரகத்தை தடுப்பதில்லை
முஹையத்தீனும் நேர்ச்சைகளும்
சுவர்க்கத்தில் நுழைப்பதில்லை
ஆனாலும் மானிடரே
அல்-குர்ஆனும் நபிவழியும்
ஆகிரத்தில் வெற்றிபெறும்
சத்தியமாய் சொல்லுகின்றேன்
சத்தியம்தான் ஜெயித்து நிற்கும்
அசத்தியம் ஓர் நாள் அழிந்துவிடும்
அந்நாளில் இதை உணர்வோம் - பெரும்
அவதிகொண்டு நாம் அலைவோம்
சத்தியம்தான் ஜெயித்து நிற்கும்
அசத்தியம் ஓர் நாள் அழிந்துவிடும்
அந்நாளில் இதை உணர்வோம் - பெரும்
அவதிகொண்டு நாம் அலைவோம்
ஆடுகளும் கோழிகளும்
அள்ளுகாணிக்கை மஞ்சள்சோறும்
அவுலியாக்களுக்கு நேர்ச்சை என்றால்
அலிபாவாக்கள் உண்பதென்ன ?
நோன்புவைத்தல் சிரம் பணிதல்
விருந்துவைத்து உபசரித்தல்
தான தர்மம் செய்திடல்
எல்லாமுமம் நேர்ச்சைதான் - அது
இறைவன் பெயரால் மட்டுமென்றால்
மடத்தனங்கள் செய்கின்றோம் ?
இஸ்லாமியத்தோழர்களே !
இன்னுமா விளங்கவில்லை
நேர்ச்சை என்பது எது என்று..
பரவாயில்லை !
”பக்கீர் ஜமாஅத்தார்” கொள்கையென்றால்
அவர்கள் பாடிடட்டும்
புகழ் ஓதிடட்டும் - பக்தி
பரவசத்தையேகிடட்டும்
ஒரு சில இரவுக்காய்
உலமாக்கள் என்கின்ற போர்வையிலே
உலவு நீங்கள் யார் ?
பாவாக்களா ? அலிபாவாக்களா ?
உங்களைத்தான் கேட்கின்றேன்...
இஸ்லாத்தின் ஆதாரம்
இறுதி நாள் வரைக்கும்
அல் குர்ஆனும் நபி வழியும் - என்று
உலகம் ஏற்றிருக்க
எவ்விடத்தில் இக் கொடி யது பற்றி
இயம்பி நிற்கு கூறிடுவீர் ?
அல் குர்ஆனும் நபி வழியும் - என்று
உலகம் ஏற்றிருக்க
எவ்விடத்தில் இக் கொடி யது பற்றி
இயம்பி நிற்கு கூறிடுவீர் ?
வாருங்கள் பேசிடுவோம் - யாரும்
வஞ்சிக்கத்தேவையில்லை
கொடி எது என்று தேடிநின்றேன் - இது
கொடியது என்று புரிந்ததுவே !
வாருங்கள் ஒன்றிணைவோம்
வையகத்தில் தீனின் கொடியை ஏற்றிடுவோம்!!
சனி, 16 நவம்பர், 2013
வீணியொழுகும் முத்தமும் பேரன் ஆதிலும்
தடுக்கித் தடுக்கி ஓடிவா
என் மடி வெறுமித்துக்கிடக்கு
உன்னை அமர்த்தி நிரப்பிக்கொள்ள
தோளில் தாவி கழுத்தை
இறுகக்கட்டிப்பிடி
நீ சுகமான சுமைதான்
என்முதுகு எப்பவுமே
உன் பல்லக்கு
நீ விரும்பும்போதெல்லாம்
உனக்கு ஊஞ்சல்
தலைமுடியை பிடித்திழுத்து
என்னை நோகவைக்கும் எண்ணம்
இன்றில்லையா உனக்கு
வா
வந்து என் காதுகளுக்குள்
வீறிட்டுப்போ
எச்சிலூறும் இதழ்களால்
பிஞ்சு முத்தம் தா
ஈரம் துடைப்பதில்
எத்தனை இன்பம் எனக்கு
முளைத்து வரும்
முன்னிரு பற்களால் - என்
விரல்களை கொறித்து விளையாட
வா
என் மடி உனக்காகவே
வெறுமித்துக்கிடக்கு
வெள்ளைச்சாரனில்
மெல்ல சூ போய்விடு
மடியில் சுடு நீர் கொட்டியதாய்
மிட்டாயின் பாணிவடிய
இல்லாது போனாலும்
உன் வீணிவடிய
பாதியில் சுவைத்து
எனக்கும் ஊட்டி எத்திவிட்டு
தத்தி தத்தி ஓட
வா
இன்னும் என் மடி
உனக்காகவே வெறுமித்துக் கிடக்கு
அல் ஹிதாயா வித்தியாலயம்
அருள்வாயே அருளாளா
-----------------------
அருள்வாயே அருளாளா அகந்தனிலே அறிவொளியை
அன்பினில் தூய்மையும் ஆக்கத்தில் ஊக்கமும்
அளித்திடு அருளாளா - அல்
ஹிதாயாவின் புகழினை அகிலத்தில் ஓங்கிட
அமைத்திடு அன்பாளா
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
ஓற்றுமை ஒழுக்கம் உயர் நற்பண்பு
ஒழுகிடும் கலையகமே - எம்
உயர்வினில் என்றும் உறுதுனை நிற்கும்
உளமுறும் எழிலகமே
நலிவுடை கிராமத்தின் நற் பல மேன்மைகள்
நமக்களித்திடும் இறையோனை
நிதமது தொழுதிட நெஞ்சத்தில் உறுதியை
நிலைபெறச் செய் அழ்ழாஹ்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
பேதங்கள் கலைந்திட ஒற்றுமை ஓங்கிட
பேறுகள் பெற்றிடனும் - அல்
ஹிதாயாவின் மாணவர் என்றெம்மை அனைவரும்
வாழ்த்திடக் கேட்டிடனும்
வகுப்பிடை வாதங்கள் நம் மனதினில் தோன்றா
விழிப்பாய் இருந்திடனும் - நாம்
வகுப்பினில் மகிழ்வாய் வாதங்கள் செய்து
அறிவினை வளர்த்திடனும்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
கல்வியில் உயர்வு கண்ணியமானது
கற்றே ஒழுகிடனும் - அல்
ஹிதாயாவின் உயர்வை அதனிலும் மேலாய்
ஆக்கிட உதவிடனும்
வையகம் செழித்திட வாழ்வினில் ஓங்கிட
உவகையில் கற்றிடனும்
உளமதில் திருமறை திருநபி வழிமுறை
ஒளி என்றும் துலங்கிடனும்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
மானுட விழுமியம் மலிவாயானதே
மாற்றிடு தயவாளா - எம்
மாணவர் வாழ்வினில் மாண்புறு மகிமையை
மணத்திட வை அழ்ழாஹ்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
-----------------------
அருள்வாயே அருளாளா அகந்தனிலே அறிவொளியை
அன்பினில் தூய்மையும் ஆக்கத்தில் ஊக்கமும்
அளித்திடு அருளாளா - அல்
ஹிதாயாவின் புகழினை அகிலத்தில் ஓங்கிட
அமைத்திடு அன்பாளா
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
ஓற்றுமை ஒழுக்கம் உயர் நற்பண்பு
ஒழுகிடும் கலையகமே - எம்
உயர்வினில் என்றும் உறுதுனை நிற்கும்
உளமுறும் எழிலகமே
நலிவுடை கிராமத்தின் நற் பல மேன்மைகள்
நமக்களித்திடும் இறையோனை
நிதமது தொழுதிட நெஞ்சத்தில் உறுதியை
நிலைபெறச் செய் அழ்ழாஹ்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
பேதங்கள் கலைந்திட ஒற்றுமை ஓங்கிட
பேறுகள் பெற்றிடனும் - அல்
ஹிதாயாவின் மாணவர் என்றெம்மை அனைவரும்
வாழ்த்திடக் கேட்டிடனும்
வகுப்பிடை வாதங்கள் நம் மனதினில் தோன்றா
விழிப்பாய் இருந்திடனும் - நாம்
வகுப்பினில் மகிழ்வாய் வாதங்கள் செய்து
அறிவினை வளர்த்திடனும்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
கல்வியில் உயர்வு கண்ணியமானது
கற்றே ஒழுகிடனும் - அல்
ஹிதாயாவின் உயர்வை அதனிலும் மேலாய்
ஆக்கிட உதவிடனும்
வையகம் செழித்திட வாழ்வினில் ஓங்கிட
உவகையில் கற்றிடனும்
உளமதில் திருமறை திருநபி வழிமுறை
ஒளி என்றும் துலங்கிடனும்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
மானுட விழுமியம் மலிவாயானதே
மாற்றிடு தயவாளா - எம்
மாணவர் வாழ்வினில் மாண்புறு மகிமையை
மணத்திட வை அழ்ழாஹ்
ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்
செவ்வாய், 12 நவம்பர், 2013
சுவையொழுகுவதென்ன தமிழிலே...
நான் கவிதை சொல்லும் வாலிபன்
உன் கனவில் தோன்றும் காதலன்
புதுமை செய்யப் பிறந்தவன்
பூவில் தேனைப் போன்றவன்
காற்றில் ஆடும் மூங்கிலில் புது
கானம் பாடும் பாவலன்
தோப்பில் ஆடும் பழங்களில்
சுவைப் பாலும் தேனும் போன்றவன்
தவழும் அலைகள் கடலிலே
உன் தாவணி சரியுது இடையிலே
பின்னிய கூந்தல் ஜடையிலே
மனம் சிக்கியதென்ன நடுவிலே
மெல்லிய பனித்துளி இதழிலே
பொன் மேனி சிலிர்க்குது குளிரிலே
பள்ளியின் நாட்களை எண்ணியே
பருவம் நாணுது கூணியே
வில்லிடை அம்பினைப் போலவே
விழிகள் விறைத்து நிற்குது எதிரிலே
சொல்லிட வார்த்தைகள் இல்லையே
சுவையொழுகுவதென்ன தமிழிலே
உன் கனவில் தோன்றும் காதலன்
புதுமை செய்யப் பிறந்தவன்
பூவில் தேனைப் போன்றவன்
காற்றில் ஆடும் மூங்கிலில் புது
கானம் பாடும் பாவலன்
தோப்பில் ஆடும் பழங்களில்
சுவைப் பாலும் தேனும் போன்றவன்
தவழும் அலைகள் கடலிலே
உன் தாவணி சரியுது இடையிலே
பின்னிய கூந்தல் ஜடையிலே
மனம் சிக்கியதென்ன நடுவிலே
மெல்லிய பனித்துளி இதழிலே
பொன் மேனி சிலிர்க்குது குளிரிலே
பள்ளியின் நாட்களை எண்ணியே
பருவம் நாணுது கூணியே
வில்லிடை அம்பினைப் போலவே
விழிகள் விறைத்து நிற்குது எதிரிலே
சொல்லிட வார்த்தைகள் இல்லையே
சுவையொழுகுவதென்ன தமிழிலே
இயற்கை
எழில் நிறை வளம் நிறை - என
இயம்பிடும் கவி நிறை
புவி நிறை பேரெலாம் - புகழ்
போற்றிடும் இயற் கலை
வனம் நிறை மலரிலும் - அம்
மலரிடைத் தேனிலும்
மனம் நிறை மணத்திலும் - நாம்
மகிழ்வுறும் இயல் வளம்
கனி தரும் சுவை தரும் - நம்
கண்குளிர் இதம் தரும்
புல் வெளிப் பூஞ்சோலை - அருவி
நீள் அரவமாய் நெளிந்தோடும்
ஆழி எங்கும் அலையாடும் - ஓடம்
அலையிடையே தள்ளாடும்
களனி எங்கும் கதிராடும் - காலை
கதிரவனின் துதிபாடும்
மலையோடு முகில் மோதும் - மதி
கெட்டபின்னே மழையாகும்
மானோட மயிலாடும் - மாலை
கருக்கலிலும் குயில் பாடும்
விந்தைகள் நிறைந்தது - நாம்
வியந்திடும் அழகிது
இயற்கையே என்பது - ஓர்
இறைவனின் படைப்பிது !
இயம்பிடும் கவி நிறை
புவி நிறை பேரெலாம் - புகழ்
போற்றிடும் இயற் கலை
வனம் நிறை மலரிலும் - அம்
மலரிடைத் தேனிலும்
மனம் நிறை மணத்திலும் - நாம்
மகிழ்வுறும் இயல் வளம்
கனி தரும் சுவை தரும் - நம்
கண்குளிர் இதம் தரும்
புல் வெளிப் பூஞ்சோலை - அருவி
நீள் அரவமாய் நெளிந்தோடும்
ஆழி எங்கும் அலையாடும் - ஓடம்
அலையிடையே தள்ளாடும்
களனி எங்கும் கதிராடும் - காலை
கதிரவனின் துதிபாடும்
மலையோடு முகில் மோதும் - மதி
கெட்டபின்னே மழையாகும்
மானோட மயிலாடும் - மாலை
கருக்கலிலும் குயில் பாடும்
விந்தைகள் நிறைந்தது - நாம்
வியந்திடும் அழகிது
இயற்கையே என்பது - ஓர்
இறைவனின் படைப்பிது !
திங்கள், 11 நவம்பர், 2013
எல்லாம் வல்ல இறையோன் நீயே
என் பிழை பொறுப்பாய் றகுமானே
வல்லமை கொண்டவன் உன்னை யன்றி
வணங்கிட இணையாய் வேறுண்டோ
என் பிழை பொறுப்பாய் றகுமானே
வல்லமை கொண்டவன் உன்னை யன்றி
வணங்கிட இணையாய் வேறுண்டோ
- எல்லாம் வல்ல-
பாவங்கள் போக்கிட தீன்மறை யளித்தாய்
பாவிகள் நாவிலும் உன்பெயருரைத்தாய்
மாண்புகள் சேர்த்திடும் நோன்பினை யளித்தாய்
மா பெரியோனே யா அல்லாஹ்
பாவிகள் நாவிலும் உன்பெயருரைத்தாய்
மாண்புகள் சேர்த்திடும் நோன்பினை யளித்தாய்
மா பெரியோனே யா அல்லாஹ்
- எல்லாம் வல்ல-
உலகினில் மாந்தர் அமைதியைக் காண
உன் மறை நபிவழி ஒளியாகும்
ஒற்றுமை கொண்டுனை துதி செய்தால்
மறுமையின் வாழ்வு நலமாகும்;
உன் மறை நபிவழி ஒளியாகும்
ஒற்றுமை கொண்டுனை துதி செய்தால்
மறுமையின் வாழ்வு நலமாகும்;
- எல்லாம் வல்ல-
சுவனமும் நரகமும் உன் அரசாட்சி
சுழலும் உலகம் அது சாட்சி
மறுமையின் நுழைவு மண்ணறைவாசல்
மாட்சிமை கொண்ட பெரியோனே
சுழலும் உலகம் அது சாட்சி
மறுமையின் நுழைவு மண்ணறைவாசல்
மாட்சிமை கொண்ட பெரியோனே
- எல்லாம் வல்ல-
மஹ்ஷரின் நாளதில் அதிபதி நீயே
மண்ணித்தருள்வாய் இறையோனே
அர்ஷதன் நிழலிலே அமர்ந்திட எனக்கு
அனுமதியளிப்பாய் தூயோனே
மண்ணித்தருள்வாய் இறையோனே
அர்ஷதன் நிழலிலே அமர்ந்திட எனக்கு
அனுமதியளிப்பாய் தூயோனே
- எல்லாம் வல்ல-
நீங்கா தவள் நினைவு
ஒளிர் நிலவின் சுடர் பொருளால்
உடலமைந்த பெண்டு
அல்லி மலர் தாங்கும் - சிறு
கொடியுடைத்த செண்டு
முல்லை மலர் பூத்து நிற்கும்
புன்னகையின் ஓரம்
முத்து மணி ரத்தினமும் - பொற்
சித்திரத்துச் சாரம்
முக்கனியும் சாறுமிவள்
சொற்களிலே ஊறும்
முகை வெடித்து விரியுமிதழ் - மேனி
மென்மையினை கூறும்
வேல் விழிக்குள் மீனிரண்டு
மெல்ல மெல்ல நீந்தும்
கார்குழலில் மல்லிகைப்பூ - இளம்
காற்றில் மணம் வீசும்
நீள்விரலை சுண்டிழுத்து
நெட்டிவிடத்தோன்றும் - பொன்
மோதிரத்து விரல் பிடித்து
போக மனம் எண்ணும்
அரும் சித்திரத்துச் சிற்பமொன்று
தாவணியில் செல்லும்
அச்சடித்த அவள் நினைவு - என்
அடிமனதில் துள்ளும்.
---------------------------------------
ஒளிர் நிலவின் சுடர் பொருளால்
உடலமைந்த பெண்டு
அல்லி மலர் தாங்கும் - சிறு
கொடியுடைத்த செண்டு
முல்லை மலர் பூத்து நிற்கும்
புன்னகையின் ஓரம்
முத்து மணி ரத்தினமும் - பொற்
சித்திரத்துச் சாரம்
முக்கனியும் சாறுமிவள்
சொற்களிலே ஊறும்
முகை வெடித்து விரியுமிதழ் - மேனி
மென்மையினை கூறும்
வேல் விழிக்குள் மீனிரண்டு
மெல்ல மெல்ல நீந்தும்
கார்குழலில் மல்லிகைப்பூ - இளம்
காற்றில் மணம் வீசும்
நீள்விரலை சுண்டிழுத்து
நெட்டிவிடத்தோன்றும் - பொன்
மோதிரத்து விரல் பிடித்து
போக மனம் எண்ணும்
அரும் சித்திரத்துச் சிற்பமொன்று
தாவணியில் செல்லும்
அச்சடித்த அவள் நினைவு - என்
அடிமனதில் துள்ளும்.
---------------------------------------
ஞாயிறு, 10 நவம்பர், 2013
கண்ணம் என்ன போர்முனையா - உன்
கண்களிரண்டும் அனுஉலையா
இமைகள் என்ன வான்படையா - என்
இளமையின் தீவிரம் புரியல்லயா
அடிக்கடி நெளியிர திமிரிலே - என்
அரும்பிய மீசை எதிரிலே
வளையிர சுழியிர வழியிலே - இந்த
வயசிக்கு ஒன்னும் புரியல்ல
பனியிலே மழையிலே நனைகிறேன் - உன்
பார்வையில்தானடி காய்கிறேன்
இரவிலும் பகலிலும் வாடினேன் - இரு
இமைகளுள் வைத்துன்னை மூடினேன்
வளர்கிற தேய்கிற வெண்மதி - கவி
வரிகளில் வருகிற தாய்மொழி
உறவினில் உணர்வினில் கலந்திடு - என்
உயிரினில் உயர்வினில் மலர்ந்திடு
-கிராமத்தான் கலிபா-
கண்களிரண்டும் அனுஉலையா
இமைகள் என்ன வான்படையா - என்
இளமையின் தீவிரம் புரியல்லயா
அடிக்கடி நெளியிர திமிரிலே - என்
அரும்பிய மீசை எதிரிலே
வளையிர சுழியிர வழியிலே - இந்த
வயசிக்கு ஒன்னும் புரியல்ல
பனியிலே மழையிலே நனைகிறேன் - உன்
பார்வையில்தானடி காய்கிறேன்
இரவிலும் பகலிலும் வாடினேன் - இரு
இமைகளுள் வைத்துன்னை மூடினேன்
வளர்கிற தேய்கிற வெண்மதி - கவி
வரிகளில் வருகிற தாய்மொழி
உறவினில் உணர்வினில் கலந்திடு - என்
உயிரினில் உயர்வினில் மலர்ந்திடு
-கிராமத்தான் கலிபா-
வெள்ளி, 14 ஜூன், 2013
எனக்குப் பிடித்த பாடல்
எண்ணெய் இல்லாமலே
என்னை விளக்காய் ஏற்றினாய்
ஜன்னல் இல்லாமலே
காற்றாய் வந்து தீண்டினாய்
என்னைச் சொல்லாமலே
இதய வாசல் தாண்டினாய்
நீ தாண்டினாய்...தாண்டினாய்...
மனம் தூண்டினாய்...
-எண்ணெய்-
அலைகள் இல்லாமலே
நுரையாய் கரையில் சேர்க்கிறாய்
பூக்கள் இல்லாமலே
மாலை ஒன்றை கோர்க்கிறாய்
கண்ணைக் கேளாமலே
கனவில் வந்து தாக்கினாய்
எனை தாக்கினாய்...தாக்கினாய்...
-எண்ணெய்-
தூரிகை இல்லாமலே
என்னை ஓவியன் ஆக்கினாய்
காவியம் சொல்லாமலே
கவிஞன் என்று மாற்றினாய்
வாலிபம் செல்லாமலே
வாழ்க்கை வீணை மீட்டினாய்
விரல் மீட்டினாய்...மீட்டினாய்...
விழி தீண்டினாய்...
-எண்ணெய்-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

