சனி, 16 நவம்பர், 2013

அல் ஹிதாயா வித்தியாலயம்

அருள்வாயே அருளாளா
-----------------------
அருள்வாயே அருளாளா அகந்தனிலே அறிவொளியை
அன்பினில் தூய்மையும் ஆக்கத்தில் ஊக்கமும்
அளித்திடு அருளாளா - அல்
ஹிதாயாவின் புகழினை அகிலத்தில் ஓங்கிட
அமைத்திடு அன்பாளா

ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்

ஓற்றுமை ஒழுக்கம் உயர் நற்பண்பு
ஒழுகிடும் கலையகமே - எம்
உயர்வினில் என்றும் உறுதுனை நிற்கும்
உளமுறும் எழிலகமே

நலிவுடை கிராமத்தின் நற் பல மேன்மைகள்
நமக்களித்திடும் இறையோனை
நிதமது தொழுதிட நெஞ்சத்தில் உறுதியை
நிலைபெறச் செய் அழ்ழாஹ்

ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்

பேதங்கள் கலைந்திட ஒற்றுமை ஓங்கிட
பேறுகள் பெற்றிடனும் - அல்
ஹிதாயாவின் மாணவர் என்றெம்மை அனைவரும்
வாழ்த்திடக் கேட்டிடனும்

வகுப்பிடை வாதங்கள் நம் மனதினில் தோன்றா
விழிப்பாய் இருந்திடனும் - நாம்
வகுப்பினில் மகிழ்வாய் வாதங்கள் செய்து
அறிவினை வளர்த்திடனும்

ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்

கல்வியில் உயர்வு கண்ணியமானது
கற்றே ஒழுகிடனும் - அல்
ஹிதாயாவின் உயர்வை அதனிலும் மேலாய்
ஆக்கிட உதவிடனும்

வையகம் செழித்திட வாழ்வினில் ஓங்கிட
உவகையில் கற்றிடனும்
உளமதில் திருமறை திருநபி வழிமுறை
ஒளி என்றும் துலங்கிடனும்

ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்

மானுட விழுமியம் மலிவாயானதே
மாற்றிடு தயவாளா - எம்
மாணவர் வாழ்வினில் மாண்புறு மகிமையை
மணத்திட வை அழ்ழாஹ்

ஆழி சிதைத்த அறிவகம் எங்கள்
அல் ஹிதாயா வித்தியாலயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக