வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அறுகம்பைத் தீவே வா

                                                                  நாசிற் கலிபா

அழகிய பூவே வா – எழில்
அறுகம்பைத் தீவே வா
கள் கொண்ட மலரே வா
கடும் கோடையின் மழையே வா

வேல்விழிக் கண்கள் கூசும்
வெறிகொண்ட பார்வைகள் போதும்
அஞ்சிலா மீனுடல் தேகம்
கொடி ஆடுதல் போலிடை ஆடும்

அலைகடல் நுரை நிறம் மாறும்
ரதி கரை உலவிடும் நேரம்
நீந்திடும் ஓடங்கள் நாளும்
இது நிலவினைப் பருகிடும் நேரம்

தாவணி நூலிடைப் பூக்கள்
தலையாட்டுது உன் நடை பார்த்து
சிப்பிகள் சிதறிடும் நாதம்
உன் சிரிப்பினில் நண்டுகள் நாணும்

அடியுனுள் சங்குகள் நொறுங்கும்
காற் சதங்கையின் ஒலியென சினுங்கும்
வாடையும் வந்துனை தீண்டும்
என் வசந்தத்தின் வாசலைத் தாண்டும்
                   

1 கருத்து:

  1. அற்புதமான பாடல். நீங்கள் இந்த துறையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு