செவ்வாய், 16 ஜனவரி, 2018

குஞ்சுபொரித்த நிலவுக்கு
நிலவு என்று பெயர்.

-கிராமத்தான் கலீபா -
பொத்துவில். 

செவ்வாய், 3 மே, 2016

குழந்தையின் முத்தங்களால் நிரம்பி வழியும்
முகத்தை 
எப்படிச் சவரம் செய்வது?
-கிராமத்தான் கலீபா-

சனி, 10 ஜனவரி, 2015



இக்ரஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் என்.ரீ.ராசுதீன் ஆசிரியர் அவர்களினால் 2015-01-11 இன்று பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு பொத்துவில் பிரதேச சபை கௌ- தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஒரு தொகுதி குளிகைஉறைகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

வியாழன், 1 ஜனவரி, 2015

”தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்கா”வில் திருட்டு
------------------------------------------------------------------------------
பொத்துவில் ஹிதாயாபுரம் ” தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்காவிற்கு வருகை தருபவர்களின் நலன்கருதி பிரதேச சபையினால் தற்காலிகமாக மின்னிணைப்பு வழங்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பெய்த மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அங்கு பொருத்தியிருந்த மின்குமிழ்கள் அனைத்தையும் திருடிச்சென்றுள்ளார்கள்.

வெள்ளி, 5 டிசம்பர், 2014

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
----------------------------------------------------------

நிகவரட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி என்.கே.ஜுமானா ஹஸீன் இம்முறை நடைபெற்ற தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளதுடன் பண்ணவ லோலங் ‌வெவ அஸ்- ஸிராஜ் வித்தியாலய மாணவி 160 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தியுள்ளார். இது இப்பாடசாலையின் ஒரு மைல்கல்லாகும்.
ஏதிர்வரும் 2015 பெப்ரவரி மாதம் வெள்ளி விழாவினைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் இப்பாடசாலையின் இருபத்தைந்து வருட வரலாற்றில் முதல்முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்திபெற்றிருப்பது இப்பாடசாலைக்கும் இக்கிராமத்திற்குமான வரலாற்றுப் பதிவாகும்.  இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்  எம்.எல்.ஏ. ஹாஸிம் அவர்களின் வழிகாட்டலில் வகுப்பாசிரியை ஏ.எம். றிஸ்வானாஅவர்களின் இடையறாத கற்பித்தலும் இங்கு பாராட்டப்பட வேண்டியதாகும். எதிர் வரும் காலங்களில் இவ்வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமனம் பெற்றிருக்கும் யூ.எல்எம். தாஸிம் அவர்களின் வழிநடாத்தலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் கிராமத்தவர்களின் ஒத்துழைப்பும் இவ்வித்தியாலயத்தின் முன்னேற்றத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

மிஹிந்தலையின் பதிவாய்...
காப்பியக்கோவுடன் சிரேஷ்ட அறிவிப்பாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் - நாச்சியாதீவு பர்வீன் - கிண்ணியா நஸ்புள்ளாவுடன்
மிஹிந்தலையின் பதிவாய்...
காப்பியக்கோவுடன் சிரேஷ்ட  அறிவிப்பாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் - நாச்சியாதீவு பர்வீன் - கிண்ணியா நஸ்புள்ளாவுடன்
மிஹிந்தலை ஏ பாரிஸ் அவர்களின் நூல் வெளியீட்டின்பின் உறவுகளுடன் ஓர்பதிவு...
இடமிருந்து வலமாக..
காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் - கவி அஷ்ரப் சிஹாப்தீன் - கவி யோ.புரட்சி - கவி கிண்ணியா அமிர் அலி - கவி செந்தூரன் - கவி பெரோஸ்கான் - கவி கிண்ணியா சபருள்ளாஹ் - கவி கிண்ணியா ஏ நஸ்புள்ளாஹ் - அடியேன் மகளுடன் -ஆசான் சமரபாகு உதயகுமார்.